Offline
தொடர்ந்து குரைத்த நாய்: விசாரிக்க சென்றவர் சாக்கடையில் சடலத்தை கண்டு அதிர்ச்சி
Published on 05/28/2024 01:12
News

அலோர் ஸ்டார்:

இங்குள்ள தாமான் டெர்கா ஜெயாவில் நேற்று மாலை உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த ஒரு பெண், தனது நாய் இடைவிடாது குரைப்பதன் காரணத்தை பரிசோதித்தபோது, அங்கிருந்த ஒரு கால்வாயில் சடலம் இருப்பதைக் கண்டதால், அதிர்ச்சியடைந்தார்.

51 வயதான லீ மிங் சிங், தனது நாய் மோப்பம் பிடித்து, மண்ணைத் தோண்டிக் கொண்டிருந்த பகுதியை நெருங்கி, அங்கிருந்த வடிகாலை நான் எட்டிப்பார்த்தேன், அங்கு ஒரு மனிதனின் உடல் கிடப்பதைக் கண்டேன்,” என்று அவர் நேற்று இரவு சம்பவ இடத்தில் சந்தித்தபோது கூறினார், மேலும் உடனடியாக சம்பவம் பற்றிக் காவல்துறையிடம் புகாரளித்தார்.

இரவு 7.25 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை, “பாதிக்கப்பட்டவருக்கு சுமார் 13 வருடங்களாக பார்கின்சன் மற்றும் மனநலப் பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற்ற மருத்துவ குறிப்பு உள்ளது என்றும் சொன்னார்.

“முதற்கட்ட விசாரணையில் எந்த குற்றவியல் கூறும் கண்டுபிடிக்கப்படவில்லை, மேலும் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சுல்தானா பஹியாவின் (HSB) தடயவியல் துறைக்கு கொண்டு வரப்பட்டது.

 

Comments