Offline
Menu
அதிகரிக்கும் ஜோகூர்-கோலாலம்பூர் சுற்றுலாப் பேருந்து கட்டணம்!
Published on 06/18/2024 00:54
News

ஜோகூர் பாரு:

அரசாங்கம் அண்மையில் அறிவித்துள்ள டீசல் மானியக் கொள்கையின் அடிப்படையில், சுற்றுலா பேருந்துகளுக்கு கட்டணக் கழிவு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், ஜோகூரிலிருந்து கோலாலம்பூருக்கு செல்லும் சுற்றிலாப்பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

“எம்சிடிஏ-யின் கீழ் உள்ள பெரும்பாலான முகவர்கள், ஏற்கெனவே கட்டணம் செலுத்திய பயணிகளிடம் கூடுதல் கட்டணத்தை செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

“பயணத் திட்டங்களை இறுதி செய்யாதவர்களுக்கு புதிய கட்டணம் பற்றி தெரிவிக்கப்படும்,” என்று டே குறிப்பிட்டார்.

போக்குவரத்து அமைச்சரான ஆண்டனி லோக்கின் அறிக்கையில் சுற்றுலாப் பேருந்துகள் அன்றாடப் பயன்பாட்டுக்கு இல்லாததால் சுற்றுலாத் துறைக்கு டீசல் கழிவு இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சுற்றுலாப் பேருந்துகள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மட்டும் ஏற்றிச் செல்வதில்லை என்பதால் இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று டே வலியுறுத்தியுள்ளார்.

Comments