Offline
ரயிலில் ஏறாமல் நள்ளிரவில் அலறி ஓடிய பயணிகள்
Published on 06/19/2024 01:37
News

காட்பாடி: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடி வந்த நிலையில் அங்கு காத்திருந்த பயணிகள் அதை பார்த்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன் தினம் இரவு புறப்பட்டது. இரவு சுமார் 11.45 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது ரயில் என்ஜினின் முன்பக்கத்தில் கால்கள் துண்டான நிலையில் வாலிபரின் சடலம் சிக்கியிருந்தது. இதை கண்ட ரயில் பயணிகள் அலறியடித்துக் கொண்டு ரயிலில் ஏறாமல் ஓட்டம் பிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பயணிகளின் அலறல் சப்தம் கேட்டு கீழே இறங்கிய ரயில் என்ஜின் டிரைவர் ரயிலில் இளைஞரின் சடலம் சிக்கியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து ரயில் என்ஜினில் சிக்கியிருந்த இளைஞரின் சடலத்தை மீட்டனர். அப்போது இளைஞர் உடலில் இரு கால்களும் துண்டாகி இருந்தது. மேலும் ரயிலில் சிக்கி இழுத்து வந்ததால் உடல் முழுவதும் சிராய்ப்புகளும் தலையின் பின் பகுதி கடுமையாக சிதைந்து இருந்ததும் தெரியவந்தது. துண்டான கால்கள் எங்கு கிடக்கிறது என்பது குறித்து போலீஸார் தேடி வருகிறார்கள்.

Comments