Offline
Menu
சார்ஜ் செய்தபோது திடீரென வெடித்துச்சிதறிய லேப்டாப்… இருவர் பலி
Published on 06/21/2024 01:20
News

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ஷரீப் புரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ‘லேப்-டாப்’ ‘சார்ஜ்’ போடப்பட்டிருந்தது. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் லேப்-டாப்-ன் பேட்டரி வெடித்து, வீட்டில் தீப்பிடித்தது. மளமளவென பற்றி எரிந்த தீ கண் இமைக்கும் நேரத்தில் வீடு முழுவதிலும் பரவியது.

இதில் வீட்டில் இருந்த 5 சிறுவர்கள், 2 பெண்கள் உள்பட 9 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஒரு சிறுவனும், சிறுமியும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் இருவரும் அண்ணன், தங்கை ஆவர். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Comments