Offline
விவாகரத்து கோரிய மனைவி கொலை: கணவர் போலீசில் சரண்
Published on 06/22/2024 01:25
News

ஈப்போ, பத்து கஜாவில் உள்ள ஜாலான் பெஜாபாட் போஸில் உள்ள ஹோட்டலில் தனது மனைவியைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். 36 வயதுடைய சந்தேக நபர்  பத்து காஜா காவல் நிலையத்தில் சரணடைந்தார் என்று பத்து காஜா போலீஸ் தலைவர் நூர் அஹவான் மொஹமட் தெரிவித்தார். ஹோட்டல் அறையில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் உயிரிழந்த 32 வயதுடைய பெண்ணின் உடலை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் சந்தேக நபர் பயன்படுத்தியதாக நம்பப்படும் கத்தியை போலீசார் கண்டுபிடித்தனர்.

முதற்கட்ட விசாரணையின்படி, விவாகரத்துக்கான கோரிக்கையைத் தொடரும் உயிரிழந்தவரின் முடிவில் சந்தேக நபரின் அதிருப்தியே கொலைக்கான காரணம் என்று நம்பப்படுகிறது என்று நூர் அஹவான் கூறினார். சந்தேக நபரும் உயிரிழந்தவரும் தனித்தனியாக ஹோட்டலுக்கு வந்து, சம்பவத்திற்கு முந்தைய நாள் ஒரே அறையில் தங்கினர் என்று அவர் கூறினார். குற்றவியல் சட்டம் பிரிவு 302இன் கீழ் கொலைக்கான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அவர்.

Comments