Offline
நடிகர் விஜயின் ‘GOAT’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!
Published on 06/23/2024 20:52
Entertainment

Song Link https://youtu.be/a5XAO2vu8lY?si=oOr474GpOjRbMBPi

 நடிகர் விஜய் நேற்று தனது ஐம்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடினார் . அவரதபெஷலாக ‘GOAT’ படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் நேற்று யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியாகியுள்ளது. கபிலன் வைரமுத்து எழுதியிருக்கும் இந்தப் பாடல் மறைந்த பாடகி பவதாரிணி குரலில் ஏஐ உதவியோடு வெளியாகியுள்ளது. பவதாரிணியுடன் இணைந்து நடிகர் விஜயும் இந்தப் பாடலை பாடியுள்ளார்.

இந்தப் பாடல் தங்கள் இதயத்திற்கு நெருக்கமானது என இயக்குநர் வெங்கட்பிரபு குறிப்பிட்டுள்ளார். ’சின்ன சின்ன…’ எனத் தொடங்கும் இந்தப் பாடலில் விஜய், சிநேகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிநேகா விஜயின் மனைவியாக படம் முழுக்க வருகிறார்.

பாடலுக்காக வெளியிட்டுள்ள இந்த போஸ்டரில் சிநேகா கர்ப்பமாக இருக்கிறார். விஜய்-சிநேகாவுடன் குட்டிப் பையன் ஒருவனும் இருக்கிறார். இதனால், விஜய் படத்தில் ட்ரிப்பிள் ஆக்‌ஷனா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். ‘GOAT’ படத்தின் முதல் பாடலை விட இந்த மெலோடி நன்றாக இருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Comments