Offline
போதையில் இருந்ததாக நம்பப்படும் போலீஸ் அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை
Published on 06/28/2024 05:01
News

ஜார்ஜ் டவுன்: சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலான வீடியோவில் போதையில் இருந்ததாக காட்டப்பட்டவர் மூத்த போலீஸ் அதிகாரி என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வடகிழக்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ரஸ்லாம் அப்துல்  ஹமீத் கூறுகையில், அந்த அதிகாரி தற்போது ஒருமைப்பாடு மற்றும் தரநிலைகள் இணங்கத் துறையின் (ஜிபிஎஸ்) ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டுள்ளார்.

ஜூன் 26 ஆம் தேதி காலை 9 மணிக்கு, வடகிழக்கு மாவட்ட காவல்துறை, TikTok பயனர் Tommy.Tan2 வெளியிட்ட வீடியோ கிளிப்பை அடையாளம் கண்டுள்ளது. இது ஜாலான் ஆயர் ஈத்தாமில் பொதுமக்களுக்கு  குடிபோதையில் இருந்ததாக நம்பப்படும் போலீஸ் சட்டை அணிந்த ஆடவரை காண முடிந்தது  என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Comments