Offline
லம்போர்கினி தீப்பிடித்து எரிந்ததால் ஆடவர் பலி
Published on 07/01/2024 12:25
News

கிழக்கு நோக்கிச் செல்லும் கிமீ 57.1 ஜாலான் பெந்தோங்-காராக் என்ற இடத்தில் இன்று ஏற்பட்ட விபத்தில் லம்போர்கினி கார் தீப்பிடித்ததில் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார். காலை 9.06 மணிக்கு தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுத் தளபதி இஸ்மாயில் அப்துல் கானி தெரிவித்தார். பெந்தோங் தீயணைப்பு நிலையத்தில் இருந்து எட்டு பணியாளர்கள், இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் 26 கிமீ தொலைவில் சம்பவ இடத்திற்கு சென்றதாக அவர் கூறினார். லம்போர்கினியில் தீ விபத்து ஏற்பட்டது. எங்கள் பணியாளர்கள் அங்கு செல்வதற்குள்  கார் தீயில் எரிந்து நாசமானது.

இந்த விபத்தின்போது ஒருவர் காரின் உள்ளே சிக்கிக்கொண்டார். ஆனால் வழிப்போக்கர்கள் முன்னதாக ஒரு பெண் பயணியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர் என்று அவர் மேற்கோள் காட்டினார். ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். அடுத்த கட்ட நடவடிக்கைக்காக இறந்தவரின் உடல் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

Comments