Offline
படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட பிரச்சனை..அசராமல் தனுஷ் செய்த காரியம்..!
Published on 07/01/2024 12:37
Entertainment

தனுஷ் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. இதைத்தொடர்ந்து தனுஷ் தற்போது தன் ஐம்பதாவது திரைப்படமான ராயன் பட வேலைகளில் பிசியாக இருக்கின்றார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

இதையடுத்து இப்படம் ஜூலை 26 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு தற்போது இப்படத்தின் ரிலீஸ் ஜூலை மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தனுஷின் பிறந்தநாள் ஜூலை மாதம் 28 ஆம் தேதி வரும் நிலையில் அதற்கு சில நாட்களுக்கு முன்பு இப்படம் வெளியாக இருப்பது தனுஷ் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியிருக்கிறது.

இப்படத்தை தொடர்ந்து தனுஷ் அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷுடன் இணைந்து இப்படத்தில் ராஷ்மிகா மற்றும் நாகர்ஜுனா நடித்து வருகின்றனர். இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

Comments