Offline
சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலி – ஓட்டுநர் படுகாயம்
Published on 09/23/2024 05:48
News

பொந்தியான்,  ஜாலான் ஜோகூர் பாரு-பத்து பஹாட் 66ஆவது கிலோ மீட்டரில் மோட்டார் சைக்கிள் வாகனம் மீது மோதியதில் பதின்ம வயதினர் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் காயமடைந்தார். வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) இரவு 9.15 மணியளவில் 63 வயது முதியவர் ஓட்டிச் சென்ற வாகனம் சந்திப்பில் வலது பக்கம் திரும்ப முயன்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக பொந்தியான் OCPD Suppt Mohammad Shofee Tayib தெரிவித்தார்.

ஓட்டுநர் பெனுட்டில் இருந்து பொந்தியான் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். விபத்து நடந்த இடம் வந்ததும், ஓட்டுநர் வலதுபுறம் திருப்ப முயன்றார். அப்பொழுது  எதிரே வந்த காரைத் தவிர்க்க நினைத்து  இடது பக்கத்தில் திரும்பியபோது பின்னால் அமர்ந்திருந்தவர் தூக்கி வீசப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 22) ஒரு அறிக்கையில் கூறினார். துரதிர்ஷ்டவசமாக, இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் ஹெல்மெட் அணியவில்லை என்று  முகமது ஷோபி கூறினார்.

தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அந்த இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும், அதே சமயம் ஓட்டுநர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி பொந்தியான் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார். வாகனத்தின் ஓட்டுநர் காயமின்றி  தப்பினார்.

Comments