கோலாலம்பூர்:
கேமரன் மலை, பிரிஞ்ஜாங் மண் சரிவுக்கு அங்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் விவசாயிகள் சந்தை திட்டம் காரணமா?
இந்தப் பகுதி சுற்றுச் சூழல் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இங்கு மேம்பாட்டு பணிகள், விவசாயம், வெட்டு மரம் போன்ற பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படக் கூடாது என்று கேமரன் மலை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் எ.திலிப் மார்ட்டின் குறிப்பிட்டார்.
இந்நிலையில் 2024 ஜுன் மாதம் தொடங்கிய இந்த விவசாயிகள் சந்தை திட்டத்தில் விதிமீறல்கள் இருக்கிறதா என்பது விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.