Offline
Menu
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 100 பேர் பலி
Published on 09/24/2024 03:30
News

பெய்ரூட்:

லெபனானில் இஸ்ரேல் இன்று நடத்திய வான்வெளி தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தாக்குதல் நடத்துவதற்கு சிறிது நேரம் முன்னதாக, இஸ்ரேலில் இருந்து அனைத்து லெபனான் போன் இணைப்புகளுக்கும் அழைப்பு வருகிறது.அதில், நீங்கள் இருக்கும் கட்டடம் மீது தாக்குதல் நடத்தப்பட உள்ளது உடனடியாக கட்டடத்தை விட்டு வெளியேறுங்கள் என்று கூறுகின்றனர்.

இன்று ஒரே நாளில் மட்டும் 80 ஆயிரம் போன் அழைப்புகள் இஸ்ரேலில் இருந்து லெபனான் தலைநகரப் பகுதிக்கு வந்ததாக, அந்நாட்டு தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் இத்தாக்குதலை நிறுத்த வேண்டும் என லெபனான் பிரதமர் நஜீப் மிகாதி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பிற நாடுகளை கேட்டுகொண்டுள்ளார்.

 

Comments