Offline
Menu
போலீஸ் அதிகாரி மீது மோதிய கொள்ளையர்கள்
Published on 09/24/2024 03:34
News

கோலாலம்பூர்:

தெலுக் பங்ளிமா காராங்கில் அண்மையில் ஒரு வீட்டில் கொள்ளையடித்துவிட்டு Proton X50 SUV காரில் தப்பிச்செல்லும் முயற்சியில் கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு போலீஸ் அதிகாரியை மோதினர்.

இந்நிலையில் போலீஸார் அவர்களை நோக்கிச் சுட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இச்சம்பவம் கடந்த வெள்ளிக் கிழமை பிற்பகல் 2.40 மணியளவில் நிகழ்ந்தது.

அண்டை வீட்டில் கொள்ளை நடக்கிறது என்று தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து போலீஸ் அங்கு விரைந்தது என்று கோல லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிண்டென்ட் அமாட் ரிடுவான் முகமட் நோர் சாலே கூறினார்.

போலீஸ் அதிகாரிகளை பார்த்த பதற்றத்தில் சந்தேகப் பேர்வழிகள் காரில் ஏறி தப்பிக்க முயற்சித்த போது ஒரு போலீஸ் அதிகாரியை மோட்டார் சைக்கிளுடன் சேர்த்து மோதினர்.

இதனால் போலீஸ் சந்தேகப் பேர்வழியின் காரை நோக்கிச் சுட வேண்டியதாயிற்று. இருப்பினும் சந்தேகப் பேர்வழிகள் தப்பி ஓடிவிட்டனர் என்ற அவர், இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றார்.

Comments