Offline
புயலின் எதிரொலி – மந்தினில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
Published on 09/25/2024 02:55
News

நெகிரி செம்பிலான், மந்தின்  பகுதியில் திங்கள்கிழமை (செப்டம்பர் 23) மாலை 5 மணியளவில் வீசிய புயலில்,  குறைந்தது 100 வீடுகள் சேதமடைந்தன. பெரும்பாலானவை வீட்டின் கூரைகள் ஆகும். மேலும் அப்பகுதியில் குறைந்தது 20 மரங்கள் விழுந்தன. நீலாய் சட்டமன்ற உறுப்பினர் ஜே. அருள் குமார் கூறுகையில், தாமான் ஸ்ரீ டாமர், தாமான் டேசா மந்தின், கம்போங் பாரு மந்தின், தாமான் அண்டலாஸ் மற்றும் பெக்கான் மந்தின் ஆகியவை பாதிக்கப்பட்ட பகுதிகளாகும்.

மோசமாக பாதிக்கப்பட்ட பகுதி தாமான் டேசா மந்தின் ஆகும். அப்பகுதியில் 50 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன என்று அவர் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) சினார் ஹரியனிடம் கூறினார். கடந்த 15 ஆண்டுகளில் புயலால் ஏற்பட்ட மிக மோசமான சேதம் இதுவாகும். ஆனால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்பட்டவில்லை.

மரம் விழுந்ததில் ஒரு கார் மட்டும் சேதமடைந்தது. ஒரு வீட்டின் கூரை பாதி தூக்கி வீசப்பட்டது  என்று அவர் கூறினார். சேதமடைந்த வீடுகளை பழுதுபார்க்க  ஐந்து ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், உடனடியாக பழுதுபார்க்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அருள் கூறினார். தற்போதைய நிச்சயமற்ற வானிலை காரணமாக காத்திருக்க முடியாது என்பதால் இன்று கூரை பழுதுபார்க்கும் பணியை முடிக்க முயற்சிப்போம்  என்று அவர்  தெரிவித்தார்.

Comments