Offline
புகையிலை, மின் சிகரெட் கட்டுப்பாடு சட்டம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலாக்கம்
Published on 09/26/2024 02:30
News

கோலாலம்பூர்:

பொது சுகாதாரத்தைக் கவனத்தில் கொண்டு, வரும் அக்டோபர் முதல் தேதி தொடக்கம் 2024 புகைத்தல் தயாரிப்பு பொருட்கள் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு சட்டம் நாட்டில் அமலாக்கம் பெறவிருக்கிறது என்று சுகாதார அமைச்சு அறிவித்திருக்கிறது.

பதிவு, விற்பனை, பொட்டலமாக்குதல் , லேபிள் தயாரித்தல், பொது இடங்களில் புகைப்பிடித்தல் போன்றவற்றுக்கான விதிமுறைகளை இந்தச் சட்டம் உட்படுத்தி இருக்கும்.

வேப் எனப்படும் மின் சிகரெட்டுகளைப் பயன்படுத்துவதற்கான விதிமுறைகளும் உத்தரவுகளும் அமல்படுத்தப்படும் என்று X தளத்தில் சுகாதார அமைச்சு அறிக்கை வெளியிட்டிருக்கிறது .

அந்தச் சட்டம் அரசு கெஸட்டில் பதிவு செய்யப்பட்டுவிட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு புகைப்பிடிப்பு தயாரிப்பு கட்டுப்பாட்டு சட்டம் அமல்படுத்தப்படுகிறது. வயது குறைந்த பிள்ளைகளுக்கு சிகிரெட் விற்பது, வயது குறைந்தோர் சிகிரெட்டை வாங்குவது , இளம் பிள்ளைகளுக்கு எந்தவகையிலான புகைப் பிடிப்பு சேவையை வழங்குவது போன்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த இந்தச் சட்டம் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டது.

Comments