Offline
1MDB விவகாரம்: நாட்டுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்ட நஜிப்
Published on 10/25/2024 01:28
News

கோலாலம்பூர்:

1MDB ஊழல் மோசடியில் சிக்கியுள்ள மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், 1MDB விவகாரம் குறித்து மலேசிய மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

இதனை அவரின் மகன் முகமட் நிஸார் இன்று (அக். 24) கோலாலம்பூர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டின் பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் நஜிப் இருந்த சமயத்தில், 1MDB ஊழல் விவகாரம் நடந்ததை எண்ணித் தாம் ஆழ்ந்த துயருற்றிருப்பதாக நஜிப் கூறியுள்ளார்.

1MDB விவகாரத்தில் புதிதாகத் தெரியவந்துள்ள தகவல்களை, சிறையில் இருந்தவாறு கடந்த 26 மாதங்களாக அறிந்துவரும் நிலையில், அவர் இவ்வாறு அறிக்கை விடுக்க அவர் முடிவுசெய்ததாகக் கூறினார்.

1MDB-யில் ‘துயரமான, மனசாட்சியற்ற செயல்கள்’ எந்த அளவுக்கு நடந்திருக்கிறது என்பதை அறிந்து தாம் பெரும் அதிர்ச்சியில் இருப்பதாக நஜிப் தெரிவித்தார்.

“அரசியல்ரீதியாக நான் ஏற்கெனவே தண்டிக்கப்பட்டுவிட்டேன். ஆனால், நான் இதில் சூத்திரதாரியும் அல்ல; அண்மைய நிகழ்வுகள் காட்டுவதுபோல் நான் ஜோலோவுடன் கூட்டுசேரவும் இல்லை. அதனால், சட்டரீதியாக நான் தண்டிக்கப்படக்கூடாது,” என்றார் நஜிப்.

 

Comments