Offline
சீனாவில் மகாராஜா படம் 2 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
Published on 11/28/2024 01:23
Entertainment

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் திரை வாழ்க்கையில் டாப் 10 திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது மகாராஜா.

2024ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களின் பட்டியலில், கண்டிப்பாக மகாராஜா டாப்பில் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்.

இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து, அனுராக் காஷ்யப், பிக் பாஸ் சாச்சனா, அபிராமி, சிங்கம் புலி, நட்டி நட்ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.

வசூல் விவரம்

இப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த நிலையில், தற்போது மகாராஜா திரைப்படம் சீனாவில் 40 ஆயிரம் திரையரங்கங்களில் வெளியிட்டுள்ளனர்.

டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ள மகாராஜா படம் இதுவரை இரண்டு நாட்கள் பிரிமியர் காட்சிகளில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, மகாராஜா படம் இதுவரை சீனாவில் ரூ. 2.15 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments