Offline
Menu
ஜகார்த்தா இசை விழாவில் 45 மலேசியர்களிடம் மிரட்டி பணம்பறிப்பு
Published on 12/26/2024 03:31
News

கோலாலம்பூர்:

கார்த்தாவில் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதிவரை 3 நாட்கள் நடந்த Djakarta Warehouse Project (DWP) எனும் இசை விழாவில் கலந்துகொண்ட மலேசியர்களிடம், இந்தோனேசியக் காவல்துறை அதிகாரிகள் மிரட்டி பணம் பறித்ததாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையின் அடிப்படையில், மலேசியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணத்தின் மதிப்பு IDR 2.5 பில்லியன் (US$160,000) என்று தேசிய காவல்துறையின் தொழில் மற்றும் பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப்துல் கரீம் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக மலேசிய பிரஜைகளால் இரண்டு அதிகாரப்பூர்வ புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மெட்ரோ டிவி நேரடியாக ஒளிபரப்பிய ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மேலும் இவ்வழக்கு விசாரணை முழுவதும் புகார்தாரர்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்படும் என்றும் கூறினார்.

டிசம்பர் 15 அன்று முடிவடைந்த வடக்கு ஜகார்த்தாவின் கெமயோரானில் நடந்த மூன்று நாள் DWP கச்சேரியில் மலேசியப் பிரஜைகளை மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்படும் 18 பணியாளர்களை கடந்த சனிக்கிழமையன்று இந்தோனேசிய போலீசார் கைது செய்தனர்.

இந்தக் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, காவல்துறையின் விரைவான நடவடிக்கையை பாராட்டிய இந்தோனேசியாவின் சுற்றுலாத் துறை அமைச்சர் விடியண்டி புத்ரி வர்தனா, இந்த சம்பவத்தால் ஏற்பட்ட சிரமத்திற்கும் பாதிப்புக்கும் சுற்றுலா அமைச்சகம் மன்னிப்பு கேட்கிறது என்றும் அவர் கூறினார்.

Comments