Offline
நிரந்தர மூளைக் காயம்: தினகரனுக்கு 18 லட்சம் ரிங்கிட் இழப்பீடு
Published on 12/27/2024 00:11
News

மூளையில் ஏற்பட்ட நிரந்தர காயங்களுக்கு 28 வயது முன்னாள் காவலாளிக்கு 18 லட்சம் ரிங்கிட் இழப்பீடு வழங்கப்பட்டது. தைப்பிங் மருத்துவமனையின் அலட்சியப் போக்கே பி.தினகரனுக்கு நிரந்தர மூளைக் காயத்தை ஏற்படுத்தியது என்று தைப்பிங் உயர் நீதிமன்ற நீதிபதி நூர் ருவினா மாட் நூர்டின் தம்முடைய தீர்ப்பில் குறிப்பிட்டார்.

தனக்கு ஏற்பட்ட இந்த பாதிப்புக்கு மலேசிய அரசாங்கம், தைப்பிங் மருத்துவமனை இயக்குனர், மூன்று டாக்டர்களுக்கு எதிராக தினகரன் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் கூட்டாக இந்த இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் உத்தரவிடப்பட்டது.

2016, ஜனவரி 2 ஆம் தேதி பிற்பகல் 1.05 மணியளவில் நிகழ்ந்த விபத்துக்குப் பின்னர் தினகரன் தைப்பிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Comments