கோலாலம்பூர்:
இந்த புத்தாண்டு நாளில் மக்களும் நாடும் நல்லிணக்கத்துடன் இருக்க இறைவனை பிரார்த்தனை செய்வதாக பேரரசர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் ராஜா பெர்மைசூரி அகோங் ராஜா சாரித் சோபியா ஆகியோர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளனர்.
2025 புத்தாண்டில் மதம் மற்றும் இனம் பாராமல் மக்களின் நல்வாழ்வுக்காக தாம் இருவரும் பிரார்த்தனை செய்வதாக பேரரசர் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.
“அனைத்து மக்களும் நாடும் ஆசீர்வாதத்துடனும் செழிப்புடனும் ஆசீர்வதிக்கப்படட்டும், எந்தவொரு பேரழிவுகளிலிருந்தும் நாடு பாதுகாக்கப்பட வேண்டும்” என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் கூறியுள்ளார்.