Offline
கோத்தா கினாபாலுவில் உள்ள ஒரு வீட்டின் பூட்டிய அறையில் ஒருவர் இறந்து கிடக்க கண்டெடுப்பு
Published on 01/02/2025 04:32
News

கோத்தா கினாபாலு:

ஜாலான் பந்தாயானில் உள்ள கம்போங் மின்டோட்டில் உள்ள ஒரு வீட்டின் பூட்டிய அறையில் 56 வயது முதியவர் ஒருவர் இன்று புதன்கிழமை (ஜன.1) இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.

அந்த வீட்டின் கதவைத் திறக்க முடியாததால், அவரது குடும்பத்தினர் அவரை அழைத்தபோது பாதிக்கப்பட்டவர் பதிலளிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து, அவரின் குடும்பத்தினர் உதவிக்காக தீயணைப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டனர் என்று, லிண்டாசா தீயணைப்பு நிலையத் தலைவர் அகஸ்தாவியா ஜோ குவாசி தெரிவித்தார்.

“தீயணைப்புக் குழுவினர் சிறப்பு கருவிகளைப் பயன்படுத்தி கதவைத் திறந்தபோது, ​​​​பாதிக்கப்பட்டவர் படுக்கையில் மயக்கமடைந்த நிலையில் கிடக்க காணப்பட்டார்,” என்றும், இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் அந்த நபர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர் என்று அவர் சொன்னார்.

 

Comments