Offline
கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் பெண் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்
Published on 01/07/2025 01:12
News

ஈப்போ:

கம்போங் பாரு ஆயர் காலா அருகே ஜாலான் லெங்காங்-கெரிக் என்ற இடத்தில், பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில், அவர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இன்று திங்கள்கிழமை (ஜனவரி 6) காலை 8.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தின் போது, பாதிக்கப்பட்டவருக்கு சில தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும், அவர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அமாட் கூறினார்.

28 வயதான அந்தப்பெண் ஓட்டிவந்த கார் சாலையின் ஓரத்தில் விபத்துக்குள்ளாவதற்கு முன், பெண் கார் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்றும், ஆனால் தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பு அப்பெண் வேகமாக சூழ்நிலையை புரிந்து செயற்பட்டு, காரில் இருந்து இறங்கினார் என்றும் அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

அப்பெண்ணின் கார் கார் தீயில் முற்றாக எரிந்து நாசமானது,” என்று அவர் மேலும் கூறினார்.

Comments