Offline
கடல் வழியாக சிகரெட்டுக்கடத்தல்; இரு வெளிநாடடவர்கள் கைது
Published on 01/07/2025 01:16
News

ஜார்ஜ் டவுன்:

நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜன. 5) மலேசிய கடல்சார் போலீசார் பட்டர்வொர்த்தில் உள்ள ஒரு வளாகத்தில் நடத்திய சோதனையில், கடத்தல் சிகரெட்டுகள் என நம்பப்படும் RM847,616 மதிப்புள்ள 4,120 அட்டைப்பெட்டி சிகரெட்டுகளை கைப்பற்றியதுடன் அங்கிருந்த இரண்டு வெளிநாட்டு ஆடவர்களையும் கைது செய்தனர்.

நேற்று மதியம் 1 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கை கடல் புலனாய்வுப் பிரிவினால் நடத்தப்பட்டது என்று மரைன் போலீஸ் பிராந்தியம் 1 கமாண்டர் ஏசிபி ரஸ்லி சி அரி கூறினார்.

“சந்தேக நபர்கள் இருவரும் சுங்கச் சட்டம் 1967 மற்றும் குடிவரவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 135(1)(d) இன் கீழ் மேல் நடவடிக்கைக்காக செபெராங் பிறை உத்தாரா (SPU) மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு (IPD) அழைத்துச் செல்லப்பட்டனர்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

Comments