Offline
Menu
துருக்கியே அதிபர் பரிசாக வழங்கிய மின்சாரக் கார்; சோதனை ஓட்டம் செய்த பிரதமர்
Published on 02/13/2025 03:30
News

கோலாலம்பூர்:

துருக்கியே அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் பிரதமருக்கு பரிசாக வழங்கிய, துருக்கி தயாரிப்பான Togg T10X மின்சார வாகனத்தை ஸ்ரீ பெர்டானா வளாகத்திற்கு பிரதமர் சோதனை ஒட்டமாக நேற்று ஓட்டிச் சென்றார்.

இது தொடர்பில் பிரதமர் தனது முகநூலில் இன்று பகிர்ந்த ஒரு காணொலியில், “நீங்கள் நான் வண்டி ஓட்டுவதை நம்பு உட்க்கார்ந்து இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நான் சுமாராகவே வண்டி ஓட்டுகிறேன்” என்று அன்வர் இணை ஓட்டுநர் இருக்கையில் இருந்த எர்டோகனிடம் கேலி செய்தார்.

“அசிசா (டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில்) என்னிடம், என்னில் நம்பிக்கையில்லாமல் நான் ஏன் இந்த வண்டியை ஓட்ட வேண்டும் என்று கேட்டார்” என்று அவர் அந்த வீடியோவில் கூறினார்.

மலேசியாவிற்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள எர்டோகன், நட்பின் அடையாளமாக அன்வாருக்கு குறித்த காரை பரிசளித்தார்.

குறித்த பயணத்தின் போது, ​​எர்டோகன் அன்வாரிடம் கார் பிடித்திருக்கிறதா என்று கேட்டார். காரின் தரம் மற்றும் வடிவமைப்பால் தான் ஈர்க்கப்பட்டதாக பிரதமர் கூறினார். “இது மிகவும் நன்றாக சீராக இருக்கிறது என்றும் இது அற்புதம் என்றும் அவர் சொன்னார்.”

மேலும் தான் பிரதமர் பதவியில் இல்லாது போனால், இந்தப் பரிசை நாட்டிற்கு திருப்பித் தருவதாக அன்வார் கூறினார்.

 

Comments