Offline
Menu
பாதுகாப்பு தளவாடங்களை ரஷியாவிடம் இருந்து இந்தியா வாங்க கூடாது: அமெரிக்கா
Published on 03/09/2025 12:29
News

வாஷிங்டன்,ரஷ்யாவை கைவிட்டுவிட்டு, அமெரிக்காவிடம் இருந்து ராணுவ தளவாடங்களை இந்தியா வாங்க வேண்டும் என்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஹோவார்ட் லுட்னிக் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஹோவார்ட் லுட்னிக் பேசியதாவது: இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் ராணுவ தளவாட வர்த்தகத்தில் வரலாற்று ரீதியிலான உறவு உள்ளது.

 

ரஷியாவிடம் இருந்து தான் இந்தியா அதிகமான ராணுவ தளவாடங்களை வாங்கி வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறோம். அதோடு ரஷியாவுக்கு மாற்றாக இந்தியாவுக்கு நவீன அமெரிக்கா பாதுகாப்பு துறை சார்ந்த தளவாடங்கள், ஆயுதங்களை வழங்க தயாராக இருக்கிறோம். இதன்மூலம் இந்தியாஅமெரிக்கா இடையேயான உறவு என்பது பலமானதாக இருக்கும்என்றார்.

Comments