கடந்த புதன்கிழமை ஐந்து மணி நேரத்திற்கு மேல், பள்ளி வேனில் விடபட்டுச் சென்ற ஐந்து வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அன்றைய தினத்தில், தாமான் புக்கிட் இண்டாவில் உள்ள பாலர் பள்ளியின் முன்புறத்தில் வேன் ஓட்டுநர் மாணவர்களை இறக்கியபோது, அச்சிறுவன் விடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.இச்சம்பவம் நண்பகல் மணி 12 அளவில் சம்பந்தப்பட்ட அச்சிறுவன் வேனில் மயக்கமுற்ற நிலையில் மீட்கப்பட்டதாக, இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர், ஏசிபி எம். குமரேசன் தெரிவித்தார்.மேலும் உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக சுல்தான் அமினா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சிறுவனின் மரணம் குறித்து விசாரணைக்காக, 56 வயதான வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.இதனிடையே, சம்பந்தப்பட்ட அந்நபருக்கு முந்தைய குற்றப் பதிவு எதுவும் இல்லை என்றும், போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான அறிகுறியும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.