2026ஆம் ஆண்டுக்கான லண்டன் மரத்தானுக்காக 11 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர். இது 2025 மரத்தானுக்கான முந்தைய உலக சாதனையான 8.4 லட்சத்தைத் தாண்டியுள்ளது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
2024 மரத்தானுடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற 45வது லண்டன் மரத்தான் 56,500 பேர் முடித்து, அதிக முடிப்பாளர் கொண்ட மரத்தானாக கின்னஸ் சாதனையை வென்றது.
இந்த நிகழ்வு நன்கொடை திரட்டலில் மட்டும் £75 மில்லியனைக் குவித்தது. பெண்கள் பிரிவில் எதியோப்பியாவின் டிகஸ்ட் அசேஃபா, 2 மணி 15 நிமிடம் 50 வினாடிகளில் ஓடி புதிய உலக சாதனை படைத்தார்.