சிலாங்கூரின் பூச்சோங் ஜயா பகுதியில் உள்ள புக்கிட் ஜாலில் நெடுஞ்சாலையில் இன்று காலை ஒரு வாகன பணிப்பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 கார்களும் 3 மோட்டார்சைக்கிள்களும் எரிந்து சேதமடைந்தன.
தீவிபத்துக்கான தகவலை அடுத்து, புச்சோங், சுபாங் ஜயா, சேரி கம்பேங்கான் மற்றும் தமன்சாரா ஆகிய இடங்களில் இருந்து 21 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தீயால் பட்டறையின் 70 சதவீதம் பகுதி முழுமையாக அழிந்துவிட்டதாக தீயணைப்பு துறை அதிகாரி அக்மல் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
இவ்விபத்தில் யாரும் காயமடையவில்லை என்றும் தீவிபத்துக்கான காரணம் விசாரணையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.