மலாக்கா தாமான் மாலிம் ஜெயா பகுதியில் உள்ள வீட்டில் ஒருவர் மரணமடைந்த நிலையில், பல நாட்களாக தொடர்பில் இல்லாததை அடுத்து நண்பர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அப்துல் ரஹிம் (69) என்பவர், மாரடைப்பு, சுவாசக்குறைவால் தவித்ததாக கூறப்பட்டு, மருத்துவமனைகளை தவிர்த்து தனியார் மருந்தகங்களையே நாடியதாக அண்டை வீட்டார் தெரிவித்தனர். கடைசி முறையாக அவரை பார்த்தவர்கள், அவர் திடீரென அதிக ஐஸ்கிரீம் உண்டதால் சுவாசக்குறைவு ஏற்பட்டதாக கூறியதாக கூறினர்.
அண்மையில் கட்டிட பணியில் ஈடுபட்ட அவர், வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.