Offline
அமெரிக்காவில் படகு கவிழ்ந்து விபத்து; 3 பேர் பலி
By Administrator
Published on 05/08/2025 09:00
News

வாஷிங்டன்,அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சாண்டிகோ நகரின் டோரி பின்ஸ் கடற்கரையில் இருந்து 15 மைல் தொலைவில் படகு விபத்துக்குள்ளானதாக கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து விரைந்து சென்ற கடலோர காவல் படையினர் நடுக்கடலில் மீன்பிடி படகு விபத்துக்குள்ளானதை கண்டுபிடித்தனர். அந்த படகு கடலில் கவிழ்ந்ததில் அதில் இருந்த 20க்கும் மேற்பட்டோர் கடலில் விழுந்துள்ளனர். இதில், 4 பேரை கடலோர காவல்படையினர் உயிருடன் மீட்டனர். ஆனாலும், இந்த சம்பவத்தில் கடலில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் மாயமாகினர். மாயமான 9 பேரையும் தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

சிறிய ரக மீன்பிடி படகில் போதைப்பொருள் கடத்தி வந்தனரா? வேறு நாட்டில் இருந்து அகதிகளை ஏற்றி வந்தனரா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments