Offline
பஹல்காம் தாக்குதல்; 11 சுற்றுலாவாசிகளின் உயிரை காப்பாற்றிய நபரின் பரபரப்பு பேட்டி
By Administrator
Published on 05/08/2025 09:00
News

ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த வியாபாரி நஜாகத் அலி, பைசரண் பள்ளத்தாக்கில் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலியானபோது, 11 வாடிக்கையாளர்களை உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றினார். சத்தீஸ்காரில் தங்கி சால்வை வியாபாரம் செய்யும் அவர், 4 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேரை ஜம்மு, ஸ்ரீநகர், குல்மார்க் அழைத்துச் சென்று, பின்னர் பஹல்காம் சென்றபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது. பட்டாசு வெடிப்பதாக நினைத்த அவர்கள், துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும் குழந்தைகளை படுக்க வைத்து, 7 கி.மீ தூரம் ஓடி பஹல்காமை அடைந்தனர்.

பயங்கரவாதிகள் மதத்தைக் கேட்டு சுட்டுக் கொன்றபோதும், சிலர் துப்பாக்கியை பறிக்க முயன்று உயிரை விட்டனர். இந்த சம்பவத்தால் காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. பாகிஸ்தான் பின்னணியில் இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டுகிறது, ஆனால் பாகிஸ்தான் மறுக்கிறது.

Comments