Offline
2025–2029: பேட்மிண்டன் சங்க புதிய தலைவராக தெங்கூ சாஃப்ருல் தேர்வு!
By Administrator
Published on 05/11/2025 09:00
Sports

மலேசிய பேட்மிண்டன் சங்கத்தின் (BAM) 2025 முதல் 2029 காலத்துக்கான புதிய தலைவராக, செனட்டர் தத்தோ ச்ரீ தெங்கூ சாஃப்ருல் அப்துல் அஸிஸ் யாரும் எதிர்ப்பின்றி unopposed தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

BAM-ன் 80வது ஆண்டுக்கூட்டத்தில் இந்த தேர்வு உறுதி செய்யப்பட்டதாகவும், துணைத் தலைவர்களாக தத்தோ வி. சுப்ரமணியம் மற்றும் தத்தோ சிரி ஜஹாபர்தீன் முகமட் யூனூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

தலைமை செயளாலராக தத்தோ கென்னி கோ, பொருளாளராக தத்தோ டியோ டெங் சோர் மற்றும் உதவி செயளாலராக முகமது தௌபிக் ஹுசைன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

BAM புதிய நிர்வாக அணிக்கு வாழ்த்துகள் என சங்கம் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளது.

Comments