Offline
Menu
மூன்றாம் நாட்டிற்கு செல்வதாக கூறி நாட்டிற்குள் நுழைய முயன்ற 105 பேர் நாடு கடத்தப்பட்டனர்
By Administrator
Published on 06/01/2025 09:00
News

வேறு நாட்டிற்கு செல்லவிருப்பதாக  கூறி வெளிநாட்டினர் சிலர் நாட்டிற்குள் நுழைய முயன்ற முயற்சியை மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டு நிறுவனம் வியாழக்கிழமை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் முறியடிக்கப்பட்டது. டெர்மினல் 1-ல் இலக்கு வைக்கப்பட்ட நடவடிக்கையின் போது வங்காளதேசம், பாகிஸ்தான்  இந்தியாவைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட நபர்களிடம் சோதனை மேற்கொள்ளபட்டதாக  அந்த நிறுவனம் தெரிவித்ததாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்களில் 105 பேர் நுழைவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று கண்டறியப்பட்டு, பின்னர் அவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப உத்தரவிடப்பட்டனர். மூன்றாம் நாட்டிற்குச் செல்லும் வழியில் மலேசியா வழியாகப் பயணிப்பதாகக் கூறுவது இந்த தந்திரோபாயத்தில் அடங்கும்  என்று அந்த நிறுவனம் ஒரு அறிக்கையில் கூறியது.

இருப்பினும், விமான நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்பட்ட விசாரணைகளில், தனிநபர்கள் கோலாலம்பூர் அனைத்துலக விமானங்களில் ஏறியவுடன் இந்த மூன்றாம் நாட்டு இடங்களுக்கான இணைப்பு விமான டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டன என்பது தெரியவந்தது. இது குடிநுழைவு அதிகாரிகளை தவறாக வழிநடத்த வேண்டுமென்றே செய்யப்பட்ட சூழ்ச்சி என்றும் அது கூறியது. நாட்டில் உள்ள அனைத்து அனைத்துலக நுழைவாயில்களிலும் அதன் கண்காணிப்பை மேம்படுத்துவதாகவும், மலேசியாவிற்குள் நுழையும் அல்லது வெளியேறும் அனைத்து நபர்களையும் முழுமையாகச் சோதனை செய்வதாகவும் அந்த நிறுவனம் கூறியது.

Comments