கோத்தா கிராய் பகுதியில் குடிமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் காடுக் குரங்குகளை கடந்த ஆண்டிலிருந்து இப்போது வரை 100க்கும் மேற்பட்டவை பிடிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்குகள் மற்றும் தேசிய பூங்காக்கள் துறை (Perhilitan) தெரிவித்துள்ளது.மக்கள் புகார்கள் பேரில், கம்புங் குபாங் லெபூர், கம்புங் பாட்டு லாடா மற்றும் தாமன் பெர்காட் ஜெயா பகுதிகளில் குரங்கு தாக்குதலால் மக்கள் அச்சத்தில் வாழ்வதாகவும், கடந்த வாரம் இரண்டு பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், காவல் நிலையம் மற்றும் கிராமத் தலைவரின் தகவலின் பேரில் துறை நடவடிக்கை எடுத்து இரண்டு இடங்களில் வலைவீச்சு நடத்தி வருகிறது.அத்துடன், குப்பைத் தொட்டிகளை சுற்றி உணவு தேடி திரியும் குரங்குகளால் மக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கிராமவாசிகள் தெரிவித்தனர்.