மன்னர் சுல்தான் இப்ராஹிம், உணர்வூட்டும் விவகாரங்களை அரசியலாக்கக் கூடாது என தலைவர்களை எச்சரித்தார். இது சமூகத்தில் கலவரத்தை உருவாக்கி, தேசிய நிலைத்தன்மையை பாதிக்கக்கூடும் என அவர் கூறினார்.அரசியல் கட்சிகள் அதிகரிப்பது மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் என்றும், ஒற்றுமையே தமக்கு கிடைக்கக்கூடிய சிறந்த பரிசு என்றும் மன்னர் வலியுறுத்தினார்.2025 அரசு விருது வழங்கும் விழாவில் உரையாற்றிய அவர், ஒற்றுமையை பேண வேண்டும் எனவும், அரசியல் தலைவர்கள் விவேகத்துடன் முடிவெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.மக்களின் வாழ்நிலையை நேரில் அறிந்து, ஏழைகளுக்கும் அஸ்நாப் குழுக்களுக்கும் உதவிகள் வழங்கும் வகையில், மத்திய மண்டலங்களில் மன்னர் பயணத்தை அவர் அறிவித்தார்.