Offline

LATEST NEWS

46-ஆம் வயதில் ரீஎன்ட்ரி
By Administrator
Published on 06/05/2025 09:00
Sports

பால்வீதி கலைஞன் மன்னி பாக்கியாவோ, நான்கு வருட இடைவெளிக்கு பிறகு 46-வது வயதில் வேல்டர்வேட் டைட்டிலுக்கு திரும்ப உள்ளார். ஜூலை 19-ஆம் தேதி லாஸ் வேகாசில், WBC சாம்பியன் மாரியோ பாரியோஸை எதிர்கொள்கிறார்.

1995-ல் துவங்கிய தனது பிரபலமான பாக்ஸிங் பயணத்தில் எட்டு வெவ்வேறு எடை பிரிவுகளில் 12 உலக பட்டங்களை வென்ற பாக்கியாவோ, “பாக்ஸிங் வாழ்க்கையை மிகவும் மிஸ் பண்ணேன்” எனக் கூறி, உடல் நலனும், வேகமும் இன்னும் சீராக இருக்கிறது என்பதால்தான் திரும்ப வந்ததாக தெரிவித்துள்ளார்.

2021-இல் யோர்டெனிஸ் உகாசிடம் தோல்வியடைந்த பின் ஓய்வுபெற்ற பாக்கியாவோ, “அந்த முடிவு என்னை புண்படுத்தியது” என உணர்வுடன் பகிர்ந்துள்ளார்.

அவரது குடும்பமும், டிரெய்னர் பிரெடி ரோச்சும் முழுமையான ஆதரவை அளித்து வருகிறார்கள். WBC-யின் அனுமதியுடன் அவர் மீண்டும் ரிங்கில் கால் வைக்கிறாராம்.

WBC தலைவர் கூறியதாவது: “பாக்கியாவோவுக்கு மிகக் குறைந்த அபாயம் தான். நல்ல உடல் நலனுடன் இருக்கிறார், முறையான வாழ்க்கை நடத்துகிறார்.”

Comments