கோமாளி மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார். தனது முதல் ஹீரோ படம் ரூ. 100 கோடி வசூல் செய்து வெற்றி கண்டார். பின்னர் நடித்த டிராகன் படமும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. LIK, Dude போன்ற படங்களையும் அவர் கைவசம் கொண்டுள்ளார்.
இந்நிலையில், பிரதீப் லவ் டுடேக்குப் பிறகு எந்த படத்தையும் இயக்கவில்லை. ஆனால் தற்போது ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் புதிய சூப்பர் ஹீரோ கதையொன்றை பிரதீப் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பிரதீப் ஹீரோவாக நடிப்பார் என்று இன்னும் உறுதியாக இல்லை.