பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் நடித்த ‘தக் லைஃப்’ திரைப்படம் கடந்த 6ம் தேதி வெளியாகியுள்ளது. இதில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், நாசர், அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த இப்படத்தின் பாடல்கள், குறிப்பாக சின்மயி பாடிய “முத்த மழை” பாடல் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்றது.
இசை வெளியீட்டு விழாவில் சின்மயி நேரில் பாடிய “முத்த மழை” பாடலுக்கு மக்களுக்கு மிகுந்த ஈர்ப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து “தக் லைஃப்” ஆல்பத்தில் 10வது பாடலாக சின்மயி வெர்ஷன் இணைக்கப்பட்டது.
இதை கேட்டு இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளத்தில் “ஒரு பாடல் கேட்டு நாடி நரம்பெல்லாம் சிலிர்த்து, உயிரில் மின்சாரம் பாய்ந்தது. இதெல்லாம் ஒரே மனிதனால், A.R. ரகுமான் அவர்களால் மட்டுமே முடியும்” என்று பகிர்ந்துள்ளார்.