மும்பை நடிகர் சல்மான் கான், கடந்த மார்ச் வெளியான சிக்கந்தர் படத்திற்கு பிறகு, அபூர்வா லக்கியா இயக்கத்தில் ராணுவ அதிகாரி வேடத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். 59 வயதிலும் திருமணம் செய்யாத அவர், விவாகரத்து பயம் காரணமாக திருமணத்தை தவிர்க்கிறார் என்று ‘தி கிரேட் இந்தியன்’ நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.