Offline
Menu
அடுத்த மாதம் கல்விச்சட்ட திருத்தம்: 17 வயது வரை பள்ளிக்கல்வி கட்டாயம் கல்வியமைச்சு.
By Administrator
Published on 06/20/2025 09:00
News

மாணவர்கள் கல்வியை இடைநிறுத்தும் பிரச்சனைக்கு தீர்வு காண, கல்வி அமைச்சகம் வரும் மாதம் கல்விச்சட்டம் 1996-இல் திருத்தங்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளது. இதன்படி, 17 வயது வரை கல்விகட்டாயமாக்கப்படும்.கல்வியமைச்சர் ஃபத்லினா சைதிக் கூறுகையில், இது இரண்டாம் நிலைப் படிப்பை முடிக்கும் வரை மாணவர்கள் தரமான கல்வி பெறுவதற்கான உரிமையை உறுதி செய்யும் ஒரு முக்கிய நடவடிக்கை என தெரிவித்தார்.மேலும், கட்டாய முன்பள்ளி கல்வி நடைமுறைப்படுத்தும் முன், தேவையான சூழல், அடுக்கமைப்பு மற்றும் பயிற்சி பெற்ற ஆசிரியை பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.இந்த நடவடிக்கை, பள்ளிக்கல்வியை இடைநிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கத்தில் எடுக்கப்படுகிறது.

Comments