Offline
Menu
சோதனை நேரத்தில் வெடித்த ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப்.
By Administrator
Published on 06/20/2025 09:00
News

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்‌எக்ஸ் நிறுவனம் தயாரித்த ஸ்டார்ஷிப் ராக்கெட், டெக்சாசில் உள்ள ஸ்டார்பேஸ் லாஞ்ச் மையத்தில் புதன்கிழமை இரவு சோதனைக்கான ஸ்டாடிக் ஃபயர் டெஸ்டின் போது வெடித்து சிதைந்தது. இது டெஸ்ட் பிளைட் முன்னோடியாக நடைபெறும் பரிசோதனையாகும். ராக்கெட்டின் 10வது சோதனைக்கு தயாராக இருந்தபோது இந்த வெடிப்பு ஏற்பட்டது. இதில் யாரும் காயமடையவில்லை என்றும், பாதுகாப்பு மண்டலம் முறையாக பராமரிக்கப்பட்டதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.123 மீட்டர் உயரம் கொண்ட ஸ்டார்ஷிப் உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த ராக்கெட்டாகும். இது மார்சுக்கு மனிதனை அனுப்பும் மஸ்க்கின் கனவில் முக்கியமான பகுதி. இதற்கு முன்பு மே மாதம் இந்த ராக்கெட் இந்தியா பெருங்கடலில் வெடித்ததுடன், முந்தைய இரண்டு முயற்சிகளும் தோல்வியடைந்தன. இருப்பினும், ஸ்பேஸ்‌எக்ஸ் தனது “விரைவில் தோல்வி, விரைவில் கற்றல்” நம்பிக்கையில் தொடர்ந்து முன்னேறி வருகிறது.

Comments