நியூசிலாந்து, சீனாவுடன் குக் தீவுகள் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை மையமாகக் கொண்டு, அந்த நாட்டுக்கு வழங்கும் உதவித் தொகையை நிறுத்தியுள்ளது. ஆலோசனை இல்லாமை மற்றும் நம்பிக்கையின்மையை காரணமாகக் கூறிய நியூசிலாந்து, குக் தீவுகள் நம்பிக்கையை மீட்டால்தான் மீண்டும் நிதி உதவி வழங்கப்படும் என Foreign Minister வின்ஸ்டன் பீட்டர்ஸின் அலுவலகம் தெரிவித்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் குக் தீவுகளுக்கு 116 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு திட்டமிட்டிருந்த 11 மில்லியன் டாலர் உதவி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கையால் சீனாவின் செல்வாக்கு பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக நியூசிலாந்து பார்க்கப்படுகிறது. இதேபோல், சீனாவுடன் நெருக்கமான உறவு கொண்ட கிறிபாட்டி நாட்டின் உதவித் திட்டங்களும் மறுபரிசீலனைக்குட்பட உள்ளன.