PRX அணி வாலோரண்ட் மாஸ்டர்ஸ் டொரண்டோ பட்டம் வென்று வரலாற்று சாதனை!
மலேசியாவின் கலீஷ் "d4v41" நோர்டின் மற்றும் அவரது Paper Rex (PRX) அணி, கனடாவில் நடந்த VCT மாஸ்டர்ஸ் டொரண்டோ இறுதிப் போட்டியில் ஐரோப்பிய மேதகு அணி Fnatic-ஐ 3-1 என வீழ்த்தி, தங்களின் முதல் சர்வதேச பட்டத்தை வென்றது.
அணியில் சிங்கப்பூர், இந்தோனேசியா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ் வீரர்கள் இருந்தனர். கலீஷ் இரண்டாவது சிறந்த வீரராக 1.12 KDA-ஐப் பதிவு செய்தார். வெற்றி பரிசாக PRX $350,000 பெற்றது.
"அழவேண்டும் என நினைக்கவே இல்லை, ஆனாலும் கண்ணீர் வந்துவிட்டது," என கலீஷ் உணர்ச்சிவசப்பட்டார்.
PRX அடுத்து ஜூலை 8–13-இல் சவூதியில் நடைபெறும் Esports World Cup-இல் பங்கேற்கிறது.
மற்றுபுறம், Alliance மற்றும் SEM9 ஆகிய மலேசிய PUBG Mobile அணிகள், தகுதி பெறத் தவறின.