Offline
மீனாவின் அரசியல் வருகை: சிவப்பு கம்பளத்துடன் வரவேற்ற கட்சி; கண்ணழகிக்கு சிபாரிசு செய்த முக்கியத் தலைவர்.
By Administrator
Published on 06/26/2025 09:00
Entertainment

கடந்த சில மாதங்களாக மீனாவின் அரசியல் வருகை பற்றிய செய்தி வெறும் வதந்தியாக தான் இருந்தது. ஆனால் தற்போது அது உறுதியாகிவிட்டது.

அவ்வப்போது மத்திய ஆளும் கட்சியின் நிகழ்வுகளில் மீனாவை பார்க்க முடிந்தது. அப்போதே இவருடைய அரசியல் பிரவேசம் விரைவில் இருக்கும் என செய்திகள் கசிந்தது.

அதற்கேற்றார் போல் சமீபத்தில் அவர் துணை ஜனாதிபதியை சந்தித்த போட்டோவை வெளியிட்டு இருந்தார். அது வைரலானதை தொடர்ந்து அவர் பாஜகவில் இணைந்து விட்டதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

அது மட்டும் இன்றி கட்சியில் முக்கிய பொறுப்பும் அவருக்கு கொடுக்கப்பட இருக்கிறதாம். அதுவும் கடவுள் பெயரை கொண்ட ஒரு பெரும்புள்ளியின் சிபாரிசு என்கிறார்கள்.

சிவப்பு கம்பளம் விரித்த கட்சி

மேலும் தற்போதைய தகவலின் படி தமிழக பாஜகவில் நான்கு பொதுச் செயலாளர் நியமிக்கப்பட இருக்கிறார்கள். அதில் குஷ்பூ, மீனா ஆகியோருக்கு மாநில பொறுப்பு வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டதாகவும் மேல் இடத்து உத்தரவுக்காக காத்திருப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கண்ணழகியும் இந்த வாய்ப்பை ஆவலோடு எதிர்பார்த்து வருகிறார்.

Comments