2023 அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேலில் தாக்குதல் நடத்தி 1,139 பேரை கொலை செய்து, 251 பேரை பணயக் கைதிகளாக காசாவிற்கு அழைத்தது. இதையடுத்து இஸ்ரேல் ஹமாஸ் மீது போர் தொடங்கி, தொடர்ந்து காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை சுமார் 57,000 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.தற்போது ஹமாஸ் பிடியில் 50 பேர் உள்ள நிலையில், அவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக காசாவில் கடும் நெருக்கடி நிலவுகிறது. இந்நிலையில், இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் 94 பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களில் 45 பேர் நிவாரண உதவிக்காக காத்திருந்தவர்கள்.