Offline
Menu
பக்கத்தரசி செல்போன் பார்த்ததால் விமானம் அவசர தரையிறக்கம்!
By Administrator
Published on 07/07/2025 09:00
News

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அருகில் இருந்த பெண்ணின் செல்போனில் RIP மெசேஜ் இருந்ததை பார்த்து, விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் இருக்கலாம் என பெண் ஒருவர் சொல்ல, விமானி விமானத்தை அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான போர்ட்டோ ரிக்கோவில் உள்ள சான் ஜுயானில் இருந்து அமெரிக்காவின் தல்லாஸ் நகருக்கு 193 பயணிகளுடன், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

அப்போது இரு பெண்கள் அருகருகே இருந்துள்ளனர். ஒரு பெண்ணின் செல்போனை மற்றொரு பெண் நைசாக எட்டிப்பார்த்துள்ளார். அப்போது போனில் “RIP” என மெசேஜ் வந்துள்ளது.

உடனடியாக அந்த பெண் விமான பணிப்பெண்ணை அழைத்து, வெடிகுண்டு மிரட்டலுக்கான மெசேஜ் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

உடனடியாக விமான பிணப்பெண், விமானிக்கு தகவலை தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து விமானத்தை இஸ்லா வெர்டேவுக்கு திருப்பி அவசரமாக தரையிறக்கியுள்ளார்.

பின்னர் விசாரணையின்போதுதான் RIP என்பதை பார்த்து தவறாக தகவல் தெரிவித்துள்ளது தெரியவந்தது.

சமூக வலைத்தளத்தில் அந்த பெண்ணுக்கு கண்டனம் வலுத்து வருகிறது. பொய் குற்றச்சாட்டு உருவாக்கிய அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Comments