Offline
Menu
80,000 வீடியோக்கள், ₹100 கோடி பணம்; புத்த துறவிகளுடன் பாலியல் உறவு Ms Golf விவகாரம் தாய்லாந்தில் பரபரப்பு!
By Administrator
Published on 07/20/2025 09:00
News

தாய்லாந்தில், புத்த மத துறவிகளுடன் பாலியல் உறவு வைத்து, அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தி மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், பாங்காக்கில் துறவிகள் மடத்தின் தலைவர் திடீரென துறவறத்தை விட்டு வெளியேறியபோது காவல்துறை சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியது.

`மிஸ் கோல்ஃப்’ (Ms Golf) என்று அடையாளம் காணப்பட்ட அந்த பெண், கடந்த ஆண்டு அந்த துறவியுடன் உறவு வைத்து, பின்னர் அவரது குழந்தையை சுமப்பத்தாக கூறி 70 லட்சம் பாட்டுக்கு மேல் குழந்தை ஆதரவு தொகை கோரியது தெரியவந்தது. இதேபோல் ஒன்பது துறவிகளிடம் சுமார் 385 மில்லியன் பாட் (ரூ.100 கோடி) அவர் பெற்றுள்ளார்.

Ms Golf வீட்டை சோதனை செய்தபோது, 80,000க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன. இவை அனைத்து துறவிகளை மிரட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டவை என காவல்துறை தெரிவித்துள்ளது.

Comments