விவாகரத்து காரணமாக பீர் மட்டுமே குடித்து உயிரிழந்த தாய்லாந்து நபர்
தாய்லாந்தில் தனது மனைவி விவாகரத்து செய்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில், 44 வயதான தவீசக் ஒரு மாதமாக உணவு உட்கொள்ளாமல் பீர் மட்டுமே குடித்து உயிரிழந்தார். அவருக்கு 16 வயது மகன் உள்ளான்.
மனைவி பிரிந்து சென்றதால் ஏற்பட்ட மன வருத்தத்தில், தவீசக் தொடர்ந்து பீர் குடித்து வந்துள்ளார். இதனால் அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து, உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவரை மருத்துவமனையில் சேர்க்க தொண்டு நிறுவனங்கள் முயன்றபோதிலும், அவர்கள் அவர் வீட்டிற்கு வருவதற்குள் தவீசக் இறந்துவிட்டார்.
போலீசார் அவரது அறையில் 100 பீர் பாட்டில்களைக் கண்டுபிடித்தனர். முதற்கட்ட விசாரணையில், அதிகப்படியான மது அருந்தியதே அவரது மரணத்திற்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.