பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி அலி அபித் அல்-காதிர் இஸ்மாயில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளால் கொல்லப்பட்டார். தெற்கு லெபனானில் பயங்கரவாத அமைப்பை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக உள்ள அனைத்தையும் தொடர்ந்து நீக்குவோம் என்று இஸ்ரேல் கூறியுள்ளது. முன்னதாக, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா தளபதி புவாத் ஷுகர், ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மற்றும் ஹிஸ்புல்லாவின் தடுப்புக் காவல் பிரிவின் தளபதி நபில் குவாவக் ஆகியோரும் இஸ்ரேலால் கொல்லப்பட்டனர்.