வங்காளதேச இடைக்கால தலைவர் முகமது யூனுஸ், ஞாயிற்றுக்கிழமை டாக்காவில் மலேசிய பிகேஆர் துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வரை சந்தித்து, வங்காளதேசம் ஆசியானில் சேர மலேசியாவின் ஆதரவை கோரினார். “நாங்கள் ஆசியானில் சேர விரும்புகிறோம்; உங்கள் ஆதரவு தேவை” என அவர் கூறினார்.வங்காளதேசம் 2020இல் ஆசியான் உரையாடல் கூட்டாளராக விண்ணப்பித்துள்ளது. இங்கு பெரும்பாலான மக்கள் இளவயதினர்; மலேசிய நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்கி, இரு நாடுகளும் பயனடையலாம் என யூனுஸ் அறிவுறுத்தினார்.ஜூலை புரட்சி ஆண்டு நினைவாக டாக்கா பல்கலைக்கழகத்தில் நூருல் இஸ்ஸா உரையாற்றினார். சமீபத்திய போர் ஜெட் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலும் தெரிவித்தார்.